திருவட்டார் அருகே விபத்து பஸ் மோதி தொழிலாளி பலி


திருவட்டார் அருகே விபத்து பஸ் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 7 Aug 2018 4:30 AM IST (Updated: 6 Aug 2018 9:54 PM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார்.

திருவட்டார்,

திருவட்டார் அருகே செறுகோல், கடமனான்குழியை சேர்ந்தவர் தங்கையன். இவருடைய மகன் அனில்குமார் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவர், நேற்று காலையில் தனது மோட்டார் சைக்கிளில் ஆற்றூருக்கு புறப்பட்டார். அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

கல்லுப்பாலம் பகுதியில் வந்த போது, மார்த்தாண்டத்தில் இருந்து பெருஞ்சாணிக்கு சென்ற அரசு பஸ், அனில்குமார் மோட்டார் சைக்கிள் மீது திடீரென்று மோதியது. இதில் அனில்குமார் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

விபத்து நடந்ததும் அந்த பகுதியில் ஏராளமானோர் கூடினர். அவர்கள் அனில்குமாரை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அனில்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Next Story