குற்றத்தை தடுக்க மதுரை காவலன் ஆப் மூலம் தகவல் தெரிவிக்கலாம், பொதுமக்களிடம் போலீசார் வலியுறுத்தல்


குற்றத்தை தடுக்க மதுரை காவலன் ஆப் மூலம் தகவல் தெரிவிக்கலாம், பொதுமக்களிடம் போலீசார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:15 PM GMT (Updated: 6 Aug 2018 8:23 PM GMT)

குற்றத்தை தடுக்க மதுரை காவலன் ஆப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களிடம் போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

பேரையூர்,

பேரையூர் திருமால் நகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இதில் குற்றம் நடந்த உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பகல் நேரங்களில் தங்கள் தெருக்களில் நடமாடும் சந்தேகப்படும் நபர்கள் குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பொதுமக்கள் வெளியூருக்கு செல்லும்போது போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் அப்பகுதியில் கூடுதல் போலீசாருடன் ரோந்து செல்ல வசதியாக இருக்கும். பொதுமக்கள் தங்கள் தெருக்களிலோ, நகர்களிலோ, தங்களுக்கு தேவையான காவலாளிகளை நியமித்து கொள்ளலாம்.

மேலும் வசதி இருப்பவர்கள் தங்கள் வீடுகளிலோ கடைகளிலோ சி.சி.டி.வி.கேமரா பொருத்திக் கொள்ளலாம்.மேலும் மதுரை காவலன் என்ற செல்போன் ஆப் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என்று வலியுறுத்தி போலீசார் பொதுமக்களிடம் தெரிவித்தனர். கூட்டத்தில் சப்–இன்ஸ்பெக்டர் நூர் தீன், உதயசூரியன் பிச்சை மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story