மாவட்ட செய்திகள்

கொடுமுடி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை + "||" + Public Siege of the newly opened tasmak shop

கொடுமுடி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை

கொடுமுடி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை
கொடுமுடி அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

ஊஞ்சலூர்,

ஊஞ்சலூர் அருகே கருமாண்டாம்பாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இங்கு இடவசதியின்மை காரணமாக அந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய முடிவு செய்தார்கள். இதற்காக சோளங்காபாளையம் பெட்ரோல் பங்க் எதிரில் பாசூர் செல்லும் பிரிவு சாலையில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த கடையை திறக்க அதிகாரிகள் நேற்று மதியம் 12 மணிக்கு அங்கு வந்தார்கள். இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை முன்பு திரண்டு முற்றுகையிட்டார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் செல்வராஜ் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் கூறும்போது, ‘இங்கு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்படாது’ என்று கூறினார்கள்.

அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. ஊத்துக்கோட்டை அருகே சுடுகாடு வழியாக லாரிகள் இயக்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்
ஊத்துக்கோட்டை அருகே சுடுகாடு வழியாக கிராவல் மண் ஏற்றிய லாரிகள் இயக்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. சுடுகாட்டில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
கோபியில் உள்ள சுடுகாட்டில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தெருவிளக்கு எரியாததால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
சேவூர் அருகே தெருவிளக்கு எரியாததால் தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பெரிச்சிபாளையத்தில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் அருகே பெரிச்சிபாளையத்தில் உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. திருப்பூர் கிருஷ்ணவேணிநகரில் கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
திருப்பூர் கிருஷ்ணவேணிநகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டரிம் பொதுமக்கள் மனு அளித்தனர்.