மாவட்ட செய்திகள்

செல்போன் எண் கேட்டு வாலிபர் தொந்தரவு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Asking the cellphone number Trouble the young man young lady Suicide

செல்போன் எண் கேட்டு வாலிபர் தொந்தரவு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போன் எண் கேட்டு வாலிபர் தொந்தரவு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் எண் கேட்டு வாலிபர் தொந்தரவு செய்ததால் மனம் உடைந்த இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை அருகே உள்ள சி.ஜி.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்செயன். விவசாயி. இவருடைய மகள் காமாட்சி(வயது 18). இவர், நேற்று முன்தினம் தங்களது வயலில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார்.


அப்போது சஞ்சீவிபுரம் கிராமத்தைச்சேர்ந்த வேலு என்பவருடைய மகன் சத்யா(20) என்பவர் தனது நண்பர்கள் 2 பேருடன் அங்கு வந்தார். காமாட்சியிடம் அவர், தான் உன்னை காதலிப்பதாகவும், உனது செல்போன் எண்ணை தரும்படியும் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் சத்யாவை கண்டித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சத்யா நேற்று முன்தினம் மாலை மீண்டும் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலருடன் காமாட்சி வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது. இதை அவமானமாக கருதிய காமாட்சி, திடீரென தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காமாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சத்யா மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. குளச்சல் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
குளச்சல் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. இளம்பெண்ணிடம் நகை பறிப்பு: மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை
இளம்பெண்ணிடம், மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
3. எண்ணூரில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை வாழ பிடிக்கவில்லை என்று எழுதிய கடிதம் சிக்கியது
எண்ணூரில் கடந்த சில நாட்களாக மனம் உடைந்த நிலையில், வாழ பிடிக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. கடன் பிரச்சினை காரணமாக விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
கடன் பிரச்சினை காரணமாக தனியார் விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. அரசு வேலை வழங்கக்கோரி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
அரசு வேலை வழங்கக்கோரி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றார்.