தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி லோகியாநகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 20). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை சமீபத்தில் ஒரு செல்போன் பறிப்பு வழக்கில் தென்பாகம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சமீபத்தில் ஜாமீனில் வந்தாராம். அதன்பிறகு வேல்முருகன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாமீனில் வந்தவர் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வேல்முருகன் படித்த கல்லூரி முன்பு மாணவர்கள், போலீசாரை கண்டித்து நேற்று காலை திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story