பெண் எம்.பி. சென்ற கார் மீது தாக்குதல், 25 பேர் மீது கொலை முயற்சி வழக்கு


பெண் எம்.பி. சென்ற கார் மீது தாக்குதல், 25 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
x
தினத்தந்தி 6 Aug 2018 11:00 PM GMT (Updated: 6 Aug 2018 11:00 PM GMT)

பெண் எம்.பி. ஹீனா காவித்தை கொலை செய்ய முயன்றதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவிலும் அவர் கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மும்பை,

நந்தூர்பர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஹீனா காவித். இவர் நேற்று முன்தினம் துலே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, அவரது கார் மீது மராத்தா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதில் ஹீனா காவித் எம்.பி. காயமின்றி தப்பினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட ஹீனா காவித் எம்.பி., இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசினார். அப்போது அவர் போலீசாரை குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் வந்த கார் மீது விஷமிகள் தாக்குதல் நடத்தினர். காரை கவிழ்த்து விட முயற்சித்தனர். எனது கட்சி தொண்டர்கள் என்னை காரில் இருந்து வெளியே இழுத்து காப்பாற் றினார்கள். இ்ல்லாவிட்டால் எனது காரை கவிழ்த்து அதில் என்னை நசுக்கி இருப்பார்கள்.

இந்த பிரச்சினையில் போலீசார் திறன்பட செயல்படவில்லை. கைதான முக்கிய குற்றவாளியை போலீசார் ஒரு மணி நேரத்திலேயே விடுவித்து விட்டனர். நான் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த தாக்குதலை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையே ஹீனா காவித் எம்.பி. சென்ற கார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது கொலை முயற்சி, வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதா கவும், 3 பேர் கைது ஆகி இருப்பதாகவும் நேற்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே ஹீனா காவித் எம்.பி. சென்ற காரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நந்தூர்பர் மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதன்படி நேற்று நந்தூர்பர் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. துலேயிலும் ஹீனா காவித் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story