கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா கொடியேற்றம்


கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 7 Aug 2018 7:58 AM GMT (Updated: 7 Aug 2018 7:58 AM GMT)

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆடி திருவிழா

கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் நாடார் உறவின்முறை சங்கத்துக்கு சொந்தமான பத்திரகாளியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலையில் ஆடி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு காலை 9 மணிக்கு மாரியப்பன், இசக்கியப்பன் குழுவினரின் மேளதாளம் முழங்க வேலாயுதபுரம் நாடார் உறவின் முறை சங்க துணை தலைவர் ரவீந்திரராஜா, செயலாளர் வேல்முருகேசன் மற்றும் நிர்வாகிகள் மங்கள பொருட்களுடன் கோவிலுக்கு வந்தனர். அதன் பின்னர் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

15-ந் தேதி வரை

இந்த விழா வருகிற 15-ந் தேதி வரை நடக்க உள்ளது. 15-ந் தேதி காலை 5 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, மாலை 3 மணிக்கு மஞ்சல் நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிசெல்வம், நிர்வாகிகள் முருகன், ஜோதிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story