மாவட்ட செய்திகள்

19 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி, கலெக்டர் தகவல் + "||" + Welfare assistance for unorganized workers

19 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி, கலெக்டர் தகவல்

19 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி, கலெக்டர் தகவல்
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள 19ஆயிரத்து 94 பேருக்கு ரூ.5கோடியே94 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

கலெக்டர் சிவஞானம் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசு தொழிலாளர் நலத்துறையின் கீழ் மாவட்டந்தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு, உடலுழைப்பு தொழிலாளர்களான கட்டுமானம், பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், தையல், சலவை, பொற்கொல்லர், மண்பாண்டம், விசைத்தறி, சமையல், தெரு வியாபாரம், ஆட்டோ உள்பட 113–க்கும் மேற்பட்ட தொழில்கள் செய்து வரும் தொழிலாளர்களை தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் மற்றும் இதர 16 நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளது.

உறுப்பினர்களாக சேருவோருக்கு வாரியங்கள் மூலம் கல்வி உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் முதல் ரூ. 8ஆயிரம் வரையும், திருமண உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகையாக ரூ.500–ம், ஓய்வூதியம் மாதந்தோரும் ஆயிரம் ரூபாய் வீதமும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கு ரூ.25ஆயிரம் வீதமும் மற்றும் விபத்து மரணத்திற்கு ரூ.1 லட்சத்து 2ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.5 லட்சம் வரையும் மற்றும் விபத்து ஊனத்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வாரியங்களை சார்ந்த 19 ஆயிரத்து 94 உறுப்பினர்களுக்கு ரூ.5 கோடியே 94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதில் கட்டுமானம் தொழிலாளர் நல வாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 13,337 மாணவ– மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 76 லட்சமும், திருமண உதவித்தொகையாக 197 பேருக்கு ரூ.7 லட்சத்து 6 ஆயிரமும், மகப்பேறு உதவித்தொகையாக 21 பேருக்கு ரூ.63 ஆயிரமும், இயற்கை மரணம் நிதியுதவியாக 219 பேரின் குடும்பத்துக்கு ரூ.37ஆயிரத்து 23 ஆயிரமும், மின்னணு மணியார்டர் மூலம் 5,320 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளாக ரூ.2 கோடியே 72 லட்சமும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. தாம்பரம் சானடோரியம் ‘மெப்ஸ்’ வளாகத்தில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ‘மெப்ஸ்’ வளாகத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா திடீரென ஆய்வு செய்தார்.
2. கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் வீடுகள் இருந்தால் கடும் நடவடிக்கை; திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் வீடுகள், வணிக வளாகங்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
4. 100 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி கலெக்டர் ஆய்வு
கரூரில் 100 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
5. ஈரோடு மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க 50 சதவீத மானியம்; கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.