விருதுநகரில் பாதாள சாக்கடை இணைப்புக்கு ஒப்பந்தக்காரரிடம் பணம் கொடுக்க வேண்டியது இல்லை


விருதுநகரில் பாதாள சாக்கடை இணைப்புக்கு ஒப்பந்தக்காரரிடம்  பணம் கொடுக்க வேண்டியது இல்லை
x
தினத்தந்தி 7 Aug 2018 10:45 PM GMT (Updated: 7 Aug 2018 9:40 PM GMT)

விருதுநகரில் வீடுகளுக்கான பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்கு பணியை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு வீட்டுக்காரர்கள் பணம் ஏதும் கொடுக்க வேண்டியது இல்லை என நகரசபை கமி‌ஷனர் சந்திரசேகர் தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகரில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.6½ கோடி மதிப்பீட்டில் இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இணைப்பு வழங்கும் ஒப்பந்தக்காரர் வீட்டு உரிமையாளர்களிடம் தனியாக பணம் கேட்டபதாக ஒரு சில இடங்களில் புகார் கூறப்பட்டது. இது பற்றி நகரசபை கமி‌ஷனர் சந்திரசேகரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கான இணைப்பு வழங்கும் பணி ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இணைப்பு வழங்கும் போது குறிப்பிட்ட வீட்டிற்குள் அவர்களது வசதிப்படி குழாய் பதிக்கும் பணியை வீட்டு உரிமையாளர்களே அவர்களது சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு வெளியே தொட்டி கட்டி பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணியை நகராட்சியின் ஒப்பந்தக்காரர் செய்து தருவார். இதற்கு வீட்டு உரிமையாளர் பணம் ஏதும் தரவேண்டியது இல்லை. அவ்வாறு ஒப்பந்தக்காரர் பணம் கேட்டால் அது பற்றி தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story