மாவட்ட செய்திகள்

தனுஷ்கோடி பகுதியில் பலத்த கடல் கொந்தளிப்பு + "||" + Strong sea turbulence in Dhanushkodi area

தனுஷ்கோடி பகுதியில் பலத்த கடல் கொந்தளிப்பு

தனுஷ்கோடி பகுதியில் பலத்த கடல் கொந்தளிப்பு
தனுஷ்கோடி பகுதியில் பலத்த கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. சூறாவளி காற்றால் தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி கடல் பகுதி. வழக்கமாக இந்த தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பாகவே காணப்படும். இந்தநிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடந்த 2 நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன், கடல் கொந்தளிப்பும் அதிகமாகவே இருந்து வருகின்றது.

எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தை தாண்டி கடல் அலைகள் 15 அடி உயரம் வரையிலும் மேல் நோக்கி சீறி எழுகின்றன. அது போல் பலத்த சூறாவளி காற்றால் கம்பிப்பாடு–அரிச்சல்முனை இடைப்பட்ட பகுதியில் சாலையின் ஒரு சில இடங்கள் மணலால் மூடப்பட்டுள்ளன.

கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்து வருவதால் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுக தளத்தினுள் உள்ளே சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருப்பதற்காக் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அரிச்சல்முனை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்காமல் இருப்பதற்காக கடலோர போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.