மாவட்ட செய்திகள்

ராமநாதபுரத்தில் மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + Motor vehicle trade union Demonstration

ராமநாதபுரத்தில் மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் வாகன தொழிற்சங்கத்தினர் மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கண்டித்தும், சட்ட மசோதாவை திரும்ப பெற கோரியும் நாடு முழுவதும் மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்திருந்தன. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மோட்டார் வாகன தொழிற்சங்கங்கள் நேற்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு வாடகை கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் நியூட்டன் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் மாரிமுத்து, ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாவட்ட செயலாளர் பக்கீர் அகமது, ராமநாதபுரம் தாலுகா மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்க தலைவர் சேதுபாலசுப்பிரமணியன், செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

மோட்டார் வாகன தொழிற்சங்கத்தினரின் இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் வாடகை கார், வேன்கள் ஓடவில்லை. ஒரு சில வாகனங்கள் அத்தியாவசிய தேவை கருதி இயக்கப்பட்டன.