மாவட்ட செய்திகள்

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் + "||" + Protest Against Motor Vehicle Amendment

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாளவாடி, சிவகிரி, சத்தியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாளவாடி பஸ் நிலையம் அருகே சி.ஜ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


இதேபோல் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் சிவகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் முத்துச்சாமி ஆகியோர் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலத்தில் டி.என்.எஸ்.டி.சி. அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டணி சார்பில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் சத்தியமங்கலம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடாமல் இருந்தது. இதில், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.