மாவட்ட செய்திகள்

போரிவிலியில் 16-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை + "||" + In poarvili Jumping from the 16th floor College student suicide

போரிவிலியில் 16-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

போரிவிலியில் 16-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
16-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை,

மும்பை போரிவிலி கிழக்கு பகுதியில் உள்ள ஏக்தா பூமி என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 16-வது மாடியில் வசித்து வந்த மாணவி சிக்கா (வயது21). இவர் மாட்டுங்காவில் உள்ள கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.


இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணி அளவில் மாணவியின் தாய் கண் விழித்தார். அப்போது தனது அருகே படுத்து கிடந்த மகள் சிக்காவை காணாதது கண்டு திடுக்கிட்டார்.

மகளை தேடி பார்த்த போது, சமையல் அறையில் உள்ள கண்ணாடி கதவு திறந்து இருந்தது.

அதன் வழியாக வெளியே எட்டி பார்த்தபோது, கட்டிட வளாகத்தில் சிக்கா படுகாயத் துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவர் அக்கம்பக்கத் தினர் உதவி யுடன் உடனடி யாக மகளை மீட்டு அருகில் உள்ள சதாப்தி மருத்துவமனை யில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித் தனர். தகவல் அறிந்து வந்த கஸ்தூா்பா மார்க் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மாணவி 16-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை
கலெக்டருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை செய்துகொண்டார்.
2. போரூர் அருகே 7-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
போரூர் அருகே 7-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.