ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய வாலிபர் வீடியோ வெளியாகி பரபரப்பு


ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய வாலிபர் வீடியோ வெளியாகி பரபரப்பு
x
தினத்தந்தி 8 Aug 2018 4:24 AM IST (Updated: 8 Aug 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி வாலிபர் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது.

மும்பை,

அண்மைகாலமாக சமூக வலைத்தளங்களில் ‘கிகி சேலஞ்ச்’ நடன வீடியோக்கள் அதிகம் இடம்பெற்று வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோ காட்சியை அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளி யிடுகிறார்கள். ‘கிகி சேலஞ்ச்’ விபரீத செயலில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

இந்தநிலையில், மும் பையை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒருபடி மேலே சென்று ஓடும் ரெயிலில் ‘கிகி சேலஞ்ச்’ விபரீதத்தில் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வாலிபர் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் தான் ‘கிகி சேலஞ்ச்’ நடனத்தில் ஈடுபட்டுள்ளார்.

மின்சார ரெயில் பெட்டியின் வாசற்படியில் நின்று நடனமாடும் அவர், பின்னர் ரெயில் கிளம்பி மெதுவாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் பிளாட்பாரத்தில் குதித்து தனது நடனத்தை தொடர்கிறார். பின்னர் மீண்டும் அவர் ரெயிலில் ஏறி விடுகிறார்.

உயிருக்கு ஆபத்தான முறையில் ‘கிகி சேலஞ்ச்’ நடனத்தில் ஈடுபட்ட அந்த வாலிபர் குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story