கருணாநிதி சாவு: அதிர்ச்சியில் தொண்டர்கள் 2 பேர் சாவு


கருணாநிதி சாவு: அதிர்ச்சியில் தொண்டர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 9 Aug 2018 3:00 AM IST (Updated: 8 Aug 2018 8:18 PM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் 2 பேர் இறந்தனர்.

பனவடலிசத்திரம்,

கருணாநிதி இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் 2 பேர் இறந்தனர்.

கருணாநிதி சாவு

தமிழக முன்னாள் முதல்– அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 27–ந் தேதி உடல்நலக்குறைவால் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளத்தை சேர்ந்தவர்கள் சண்முகையா (வயது 68). காய்கறி வியாபாரி. இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். வேலுச்சாமி (68). கொத்தனார்.

அதிர்ச்சியில் 2 பேர் சாவு

இவர்களுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தீராத பற்று உண்டு. 2 பேரும் கடந்த 27–ந் தேதி முதலே வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தனர். மேலும் தொலைக்காட்சியில் தினமும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து பார்த்துக்கொண்டே இருந்தனர். 

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தொலைக்காட்சியில் கருணாநிதி இறந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க இயலாது என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டதையும் பார்த்தனர். 

இதில் மேலும் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் தங்களது வீட்டில் மயங்கி விழுந்து இறந்தனர். கருணாநிதி இறந்த அதிர்ச்சியில் தொண்டர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.


Next Story