கருணாநிதி மறைவையொட்டி அரசியல் கட்சியினர் மவுன ஊர்வலம்


கருணாநிதி மறைவையொட்டி அரசியல் கட்சியினர் மவுன ஊர்வலம்
x
தினத்தந்தி 9 Aug 2018 4:15 AM IST (Updated: 9 Aug 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி மறை வையொட்டி அரசி யல் கட்சியினர் மவுன ஊர்வலம் நடத்தினார் கள். கடைகளும் அடைக் கப்பட்டன.

ஈரோடு,

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையொட்டி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மவுன ஊர்வலம் நடத்தினார்கள். மேலும் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

கோபி பெரியார் திடலில் கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக அ.தி.மு.க.வினர் கோபி எம்.எல்.ஏ. அலுவலகத் தில் ஒன்று கூடினார்கள். அங்கிருந்து சத்தி மெயின் ரோட்டில் மவுன ஊர்வலம் சென்று பெரியார் திடலை அடைந்தார்கள்.

கோபியில் எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. கடை கள், தினசரி மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தன. கோபி பெரியார் திடலில் இருந்து மாலை 3 மணி அளவில் அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

சத்தியமங்கலத்தில் எஸ்.ஆர்.டி. திடலில் இருந்து நகர தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.ஜானகிராமசாமி தலை மையில் தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் புறப்பட்டார்கள். இந்த ஊர்வலம் ரங்கசமுத்திரம், புதுபாலம், வடக்குப்பேட்டை, திப்பு சுல்தான்ரோடு, மஜீத்விதி, கடைவீதி வழியாக கோட்டுவீராம்பாளையத்தில் உள்ள திருவள்ளுவர் திடலை அடைந்தது. அங்கு 2 நிமிடம் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத் துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். ஊர்வலத் தில் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஐ.ஏ.தேவராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ மற்றும் தி.மு.க. உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சத்தியமங்கலத் தில் உள்ள அனைத்து கடை களும் அடைக்கப்பட் டிருந்தன. தினசரி மார்க்கெட் டும் மூடப்பட்டது. பஸ்கள் இயங்காததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட் டது.

கொடுமுடியில் பழைய பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஒன்று கூடினார்கள். பின்னர் கொடுமுடி தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் கந்தசாமி தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் மவுன ஊர்வலம் புறப்பட்டனர். அங்கிருந்து புதிய பஸ் நிலையம், போலீஸ் நிலையம், மகுடேசுவரர் கோவில், மணிக்கூண்டு, சுல்தான் பேட்டை வழியாக சென்று மீண்டும் பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று மருந்து கடை, பால் பூத்துக்கள் மட்டும் திறந் திருந் தன. அதுதவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட் டன. ஆட்டோ, மினி வேன், வாடகை கார் இயங்கவில்லை. பஸ் நிலையம் முன்பு கருணாநிதியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தாளவாடி பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அனைத்து கட்சி சார்பில் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட் டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தப்பட்டது. அதைத் தொடர்ந்து தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவண்ணா தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடந்தது.

அந்தியூரில் எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. இத னால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகளும் மூடப்பட்டன. அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைக்கிராமம் தாமரைக ரையில் தி.மு.க.வினர் முன்னாள் பர்கூர் ஊராட்சி தலைவர் ஹரிதாஸ் தலைமையில் கருணாநிதியின் உருவப்படத்தை கையில் ஏந்திக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலமாக சென்றனர். அதைத்தொடர்ந்து தாமரை கரை பஸ்நிறுத்தத்தில் கருணாநிதியின் உருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் பர்கூர் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆப்பக்கூடலில் தி.மு.க. நகர செயலாளர் கோபால் தலைமையில் தி.மு.க.வினரும், பிரம்மதேசத்தில் அனைத்து கட்சியினரும் மவுன ஊர்வலம் நடத்தினார்கள்.

நம்பியூரில் ஒன்றிய தி.மு.க. பொறுப்பு செயலாளர் செந்தில் தலைமையில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம் சென்றார்கள். கொன்னமடையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சென்றது. இந்த ஊர்வலத்தில் நம்பியூர் அனைத்து வியாபாரிகள் சங்கம், அரிமா சங்கம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி பஸ் நிலையத்தில் கருணாநிதி உருவபடத்துக்கு தி.மு.க.வினர் மற்றும் பொது மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டன. அதேபோல் பெருந்து றையிலும் எந்த கடைகளும் திறக்கப்படவில்லை.

அறச்சலூர் பேரூர் தி.மு.க. செயலாளர் விஜியகுமார் தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. கொடுமுடி கைகாட்டி பிரிவில் இருந்து ஊர்வலம் தொடங்கி சென்னிமலை கைகாட்டி பிரிவு வரை சென்று மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தது. அதைத் தொடர்ந்து அங்கு கருணாநிதி யின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் கள். இதில் வடுகப்பட்டி பேரூர் தி.மு.க. செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதி மனோகரன், அறச்சலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சுலோச்சனா சண்முகசுந்தரம் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

அம்மாபேட்டையில் பேரூர் தி.மு.க. செயலாளர் எஸ்.பெரியநாயகம் தலைமையிலும், நெரிஞ்சிப்பேட்டையில்பேரூர் தி.மு.க. செயாளர் கண்ணன் தலைமையிலும், வெள்ளித்திருப்பூரில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார் தலைமையிலும் கட்சியினர் மவுன ஊர்வலம் நடத்தினார்கள். மேலும் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அம்மாபேட்டையில் பேரூர் தி.மு.க. செயலாளர் எஸ்.பெரியநாயகம் தலைமையிலும், நெரிஞ்சிப்பேட்டையில்பேரூர் தி.மு.க. செயலாளர் கண்ணன் தலைமையிலும், வெள்ளித்திருப்பூரில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார் தலைமையிலும் கட்சியினர் மவுன ஊர்வலம் நடத்தினார்கள். மேலும் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் பவானி உள்பட மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பஸ்கள் ஓடவில்லை.

புஞ்சைபுளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. அதன்பின்னர் 11 தொண்டர்கள் மொட்டை அடித்துக்கொண்டார்கள். தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட பல அரசியல் கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.

Next Story