மாவட்ட செய்திகள்

கருணாநிதி மறைவு: சென்னையில் பஸ்-ஆட்டோக்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு + "||" + Karunanidhi's death: Bus-autos did not run in Chennai, shops shutters

கருணாநிதி மறைவு: சென்னையில் பஸ்-ஆட்டோக்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு

கருணாநிதி மறைவு: சென்னையில் பஸ்-ஆட்டோக்கள் ஓடவில்லை, கடைகள் அடைப்பு
கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னையில் நேற்று பஸ்-ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கவலை தோய்ந்த முகத்தோடு வந்து கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னையில் பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன.


சென்னையின் அங்காடித்தெரு என்று அழைக்கப்படும் தியாகராயநகர் ரெங்கநாதன் தெரு, பாண்டி பஜார், பர்மா பஜார், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், சைதாப்பேட்டை, பெரம்பூர், பழைய வண்ணாரப்பேட்டை, அமைந்தகரை, கோயம்பேடு, சேத்துப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஜவுளி கடைகள், பல்பொருள் அங்காடிகள், மளிகை கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

இதனால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

அதே சமயத்தில் பால், தோசை மாவு உள்பட சில அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கொடுங்கையூர், பெரம்பூர், வியாசர்பாடி உள்பட பல்வேறு இடங்களிலும் காலையில் சிறிது நேரம் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் உயிர்காக்கும் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்து கடைகள் திறந்திருந்தன.

அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் நேற்று பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோல ஆட்டோக்கள் மற்றும் தனியார் கால் டாக்சிகளும் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் தாங்கள் செல்லவேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகினர்.

கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தமட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சென்னையை பொறுத்தமட்டில் ஒட்டுமொத்தமாக கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் அலுவலகங்கள், கம்பெனிகளுக்கு பணிக்கு செல்வோர் வீட்டிலேயே முடங்கினர்.

இதனால் வழக்கமான நாட்களில் வாகனங்களால் விழி பிதுங்கும் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் வெறிச்சோடியது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டதையடுத்து கடைகள் படிப்படியாக திறக்கப்பட்டன. மேலும் பஸ், ஆட்டோக்களும் ஓடத்தொடங்கின. இதையடுத்து இயல்பு நிலை திரும்பியது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ரூ.7 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் 4 பேர் அதிரடி கைது; சொகுசு கார் பறிமுதல்
சென்னையில் ரூ.7 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. தங்கம் வாங்கும்போது தவறாமல் கவனிக்க வேண்டியவை...
நகை, நாணயம் என்று எப்படித் தங்கம் வாங்கினாலும் வாங்குவோர் மனதில் ஒரு சந்தோஷம் நிழலாடும். ஆனால் தங்கம் வாங்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்...
3. 1,560 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்–நிதி உதவி; அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
1,560 பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன், நிதி உதவியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
4. ஈரோட்டில் காபியில் தூக்க மாத்திரை கலந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
ஈரோட்டில் வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து காபியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பட்டப்பகலில் துணிகரமாக பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம பெண் ஒருவர் பறித்து சென்றார்.
5. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை; கிராம சபைக் கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. உறுதி
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கம்பிக்குடி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. சார்பில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தெரிவித்தார்.