பெண்களை சீண்டவைத்த ஆடை
ஸ்காட்லாந்தில் இருக்கிறது ஹூட்டானன்னி உணவு விடுதி. இங்கே பணிபுரியும் ஆண்கள், கட்டாயம் ஸ்காட்லாந்தின் பாரம்பரிய பாவாடையை அணிந்துகொள்ள வேண்டுமாம்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பாவாடை அணிந்துகொள்வது பொருத்தமாக இல்லை என்றாலும், நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக பாவாடையை அணிந்து வருகிறார்கள். சமீப காலமாக இந்த விடுதிக்கு வரும் பெண்கள், மது அருந்திவிட்டு பாவாடை அணிந்திருக்கும் ஊழியர்களைக் கிண்டல் செய்கிறார்கள். சிலர் பாவாடையை இழுக்கிறார்கள். ஆரம்பத்தில் விளையாட்டு என்று நினைத்த ஊழியர்கள், இப்படிப்பட்ட விஷயங்கள் தொடர்ந்து நிகழ்ந்ததில் மனம் உடைந்து போனார்கள். இனிமேல் தாங்கள் இந்தப் பாவாடைகளை அணிந்து கொண்டு வேலை செய்ய இயலாது என்று எல்லோரும் கூறிவிட்டனர்.
‘‘வாடிக்கையாளர்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல என்னுடைய ஊழியர்களும் முக்கியம். இனி யாரும் பாரம்பரிய பாவாடையை அணிய வேண்டாம்’’ என்று கூறிவிட்டார் விடுதியின் மேலாளர்.'
# என்னடா இது..! ஆண்களுக்கு வந்த சோதனை.
Related Tags :
Next Story