விநோத பழக்கங்கள்


விநோத பழக்கங்கள்
x
தினத்தந்தி 9 Aug 2018 9:45 PM GMT (Updated: 9 Aug 2018 7:30 AM GMT)

இந்தோனேஷியாவின் டானா டோரஜா பகுதி மலையும் காடுமாக இருக்கிறது.

இங்கு வசிக்கும் கிராம மக்கள், இறந்த குழந்தைகளை பெரிய மரங்களில் அடக்கம் செய்கிறார்கள். ஓங்கி வளர்ந்திருக்கும் பருமனான மரங்களில் துளைகள் இட்டு, உடலை வைத்து, பனை மரக்குச்சிகளால் அடைத்து விடுகிறார்கள். இப்படி ஒரு மரத்தில் 8 உடல்கள் வரை அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. மரங்களை குடைந்து உடலை வைத்தாலும், மரங்கள் உயிருடன் பசுமையாக வளர்ந்து நிற்கிறது.

‘‘இறந்தவர்கள் எங்களுடனும், இயற்கையுடனும் இணைந்து இருப்பதற்காகவே மரங்களில் அடக்கம் செய்கிறோம். இதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இறந்தவர்களுக்காகத் திருவிழாவையும் கொண்டாடுகிறோம்.

அந்தநாளில் இறந்தவர்கள் எங்களுடன் பேசுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்கிறார்கள், அப்பகுதி மக்கள்.

#நம்பிக்கை, அதுதானே எல்லாம்..!

Next Story