மாவட்ட செய்திகள்

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை + "||" + Soriumuthu goes to Ayyanar temple The road should be adjusted

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நெல்லை, 

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சொரிமுத்து அய்யனார் கோவில்

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பாபநாசம் காரையாறு அணைக்கு அருகில் காணிக்குடியிருப்பு பகுதியில் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெள்ளி, செவ்வாய், சனி, ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் ஆண்டு தோறும் ஆடி அமாவாசையன்று திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

மேலும் இந்த கோவிலுக்கு அருகில் பாபநாசம் காரையாறு அணை, பாணதீர்த்த அருவி மற்றும் சேர்வலாறு அணை ஆகியவை உள்ளன. இங்கும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இங்கு வருகின்ற சாலை பாபநாசத்தில் இருந்து கீழ் அணை மின்சார வாரிய குடியிருப்பு வரை நன்றாக உள்ளது. மின்சார வாரிய குடியிருப்பு பகுதியில் குண்டும், குழியுமாக வாகனங்கள், பஸ்கள் செல்லமுடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.

சாலையை சீரமைக்க வேண்டும்

சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. கோவிலுக்கு செல்கின்ற சாலை மோசமாக உள்ளதால் வாகனங்கள் செல்லமுடியாதநிலை உள்ளது. எனவே இந்த சாலையை போர்கால அடிப்படையில் உடனே சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.