மாவட்ட செய்திகள்

ஹாட் வாட்டர் சேலஞ்ச் + "||" + Hot Water Challenge

ஹாட் வாட்டர் சேலஞ்ச்

ஹாட் வாட்டர் சேலஞ்ச்
டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புதுப்புது சவால்கள் டிரெண்ட் ஆகிவருகின்றன.
தோசை சுடும் சவால், விராட் கோலி பிரதமருக்கு விடுத்த பிட்னஸ் சவால், குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும் சவால்... போன்றவை அடிக்கடி தோன்றி மறைவதுண்டு. சமீபத்தில் கூட, ஓடும் காரில் இருந்து இறங்கி ஆடும் ‘கிகி’ சவால் டிரண்டாகி போனது. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சவால் என்பதால் இந்தியாவில் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. இந்த டிரெண்ட் அடங்கி முடிவதற்குள், அடுத்ததாக மற்றொரு சவால் டிரெண்ட் ஆகி இருக்கிறது. சுடுதண்ணீரை உடலில் ஊற்றிக்கொள்வதுதான், இந்த ஹாட் வாட்டர் சேலஞ்ச். புத்தியில்லாதவர்கள் இதை சவாலாக டிரெண்ட் ஆக்கி விட, இன்று பலரும் சவாலை ஏற்று உடலை புண்ணாக்கிக் கொண்டனர். சிலர், இந்த சவாலினால், உடல் வெந்து போகும் அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் டிரெண்டிங் என்ற பெயரில் கிளம்பும், முட்டாள்தனமான சவால்களை ஏற்று உடலை புண்ணாக்கிக் கொள்ளாதீர்கள்.

#இந்த டிரெண்டிங் பழக்கம் எங்க போயி முடியப்போகுதோ..?