சவாலான சவால்
சவாலில் வெற்றிப்பெறுபவர்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக விடுதியில் சாப்பிடலாமாம்.
நியூயார்க்கைச் சேர்ந்த உணவு விடுதியின் உரிமையாளர் விக் ரோபே, 13.5 கிலோ எடை கொண்ட மெக்சிகன் உணவை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்தால், தன்னுடைய விடுதியின் லாபத்தில் இருந்து 10 சதவீதத்தை அளிப்பதாக அறிவித்திருக்கிறார். அத்துடன் இந்த சவாலில் வெற்றிப்பெறுபவர்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக அந்த விடுதியில் சாப்பிடலாமாம். கேட்பதற்கு மிக சுலபமாக தோன்றும் இந்த சவால், நிஜமாகவே சவாலான ஒன்றுதான். ஏனெனில் அரிசி, இறைச்சி, பீன்ஸ், சீஸ் எல்லாம் கலந்து செய்யப்பட்டு இருக்கும் இந்த உணவை மிளகுச் சாறுடன் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இதுவரை யாரும் சாப்பிட்டு ஜெயித்ததில்லை. சாப்பிடுவதற்கு முன்பே, உணவால் ஏதாவது உடல் நலத்துக்குத் தீங்கு ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பல்ல என்பதையும் சொல்லிவிடுகிறார்கள். மேலும் சாப்பிட முடியாமல் திணறும் போட்டியாளர்களிடம், அதற்கான கட்டணத்தையும் வாங்கிவிடுகிறார்கள். இதனால் போட்டியாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
# நீ தான் தைரியமான ஆள் ஆச்சே, தமிழ்நாட்டுல கடையை திறந்துபாரு!
Related Tags :
Next Story