மாவட்ட செய்திகள்

நிலக்கரி + "||" + Coal

நிலக்கரி

நிலக்கரி
நிலக்கரி என்பது கரிமப் பொருளும், கனிம தாதுக்களும் கலந்த, இறுகிய திடமான எரியத்தக்க ஒரு படிவுப்பாறை.
நிலக்கரியில் 60 முதல் 90 சதவீதம் கார்பனும், 12 சதவீதம் வரை ைஹட்ரஜனும், 2 முதல் 20 சதவீதம் வரை ஆக்சிஜனும், 3 சதவீதம் நைட்ரஜனும் உள்ளன. இந்திய நிலக்கரி வளங்களை பெர்மியன் (23 கோடி ஆண்டுகளுக்கு முன்) காலத்தில் உருவான கோண்ட்வானா நிலக்கரி, யூசின் மற்றும் மியோசின் காலத்தில் உருவான டெர்ஷரி நிலக்கரி என இரண்டாக பிரிக்கலாம்.

peat, Lignite. Bituminous, Anthracite என்பதே நிலக்கரி உருவாக்க வரிசை. கார்பன் விழுக்காட்டின் அடிப்படையில் இதன் மறுதலை வரிசையில் நிலக்கரியை வகைப்படுத்தலாம். Peat-ல் 3 சதவீதமும் Anthracite-ல் 95 சதவீதமும் கார்பன் உண்டு.

இந்தியாவில் தமோதர், கோதாவரி, நர்மதா ஆற்றுப்படுகைகளில் கோண்ட்வானா நிலக்கரியும் , தமிழ்நாடு, அஸ்ஸாம், ராஜஸ்தான் மாநிலங்களில் Tertiary நிலக்கரியும் கிடைக்கின்றன. இந்திய மின்சார உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பு செய்யும் அனல்மின் துறையின் முக்கிய ஆற்றல் மூலம் நிலக்கரியே.