துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 9 Aug 2018 9:32 AM GMT (Updated: 9 Aug 2018 9:32 AM GMT)

காந்தம், மெக்னீசியா என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

புவியின் காந்த அச்சு 17 சதவீதம் சாய்ந்துள்ளது.

இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகியவை பெர்ரோ காந்தங்கள்.

ஆக்சிஜன், பாரா காந்தத்தன்மை கொண்டது.

மின்சார அழைப்பு மணியில் மின்காந்தம் பயன்படுகிறது.

காந்தப்பொருள் தன் காந்தத்தன்மையை இழக்கும் வெப்பநிலை கியூரிப் புள்ளி எனப்படும்.

இரும்பின் கியூரிப் புள்ளி 780 டிகிரி சென்டிகிரேடு.

நிக்கல், கோபால்ட் இவற்றின் கியூரி புள்ளிகள் முறையே 360 டிகிரி சென்டிகிரேடு, 1090 டிகிரி சென்டிகிரேடு ஆகும்.

மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தவர் பாரடே.

மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கண்டறிந்தவர் ஒயர்ஸ்டட்.

சந்திரனில் காந்தப்புலம் இல்லாததால் அங்கு காந்த ஊசி விலகல் அடையாது. 

Next Story