கல்வித்துறையில் ஹோலோலென்ஸ்


கல்வித்துறையில் ஹோலோலென்ஸ்
x
தினத்தந்தி 9 Aug 2018 9:45 AM GMT (Updated: 9 Aug 2018 9:45 AM GMT)

வாழ்க்கையில் மட்டுமல்ல கல்வித் துறையிலும் ஹோலோகிராபி தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த இருக்கிறது.

இன்று ஸ்மார்ட்பள்ளிகள் பெருகி வருகின்றன. இங்கு ஒளிஒலி காட்சியாக இருபரிமாண வடிவில் பாடங்கள் நடத்தப்படுகிறது. இது ஆசிரியரின் உரை விளக்கத்தைவிட தெளிவாக மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தும். இதன் அடுத்த தலைமுறை வளர்ச்சியாக வரப்போகிறது ஹோலோகிராபி கல்வி முறை. முப்பரிமாண முறையில் பாடம் சம்பந்தமான காணொளி காட்சிகள் (வீடியோ) இடம் பெற்றால், மாணவர்களால் இன்னும் நுட்பமாக பாடங்களை புரிந்து கொள்ள முடியும்.

மேலும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு, உலகின் சிறந்த ஆசிரியரிடம், பாடம் படிக்கலாம். உங்கள் ஆசிரியர் எங்கிருந்தபடியும் உங்களுக்கு பாடம் நடத்த முடியும்.

இன்னும் சொல்லப்போனால் இருக்கும் இடத்தையே பள்ளியாக, கல்லூரியாக மாற்றிவிடலாம். நிச்சயம் எதிர்காலத்தில் ஹோலோகிராபி பள்ளிகள் உலகம் முழுவதும் உருவாகிவிடும் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதன் ஆரம்ப கட்டமாக உலகின் புகழ்பெற்ற கல்விமையங்களில் ேஹாலோகிராபி பற்றிய பாடங்கள் அறிமுகமாகிவிட்டன. கணினித் தொழில்நுட்பம் படிப்பவர்கள், கிராபிக்ஸ் பற்றிய ஒரு பாடத்தையும் படிப்பார்கள். அதன் உட்பிரிவாக விளங்கிய ேஹாலோகிராபி இப்போது முக்கியத்துவம் பெற்று தனிப்பாடப்பிரிவாக உருவாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஹோலோகிராபி இமேஜிங் தனிப்பாடப்பிரிவு சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அரிசோனா பல்கலைக்கழகத்தில் ேஹாலோகிராபி அண்ட் டிபரக்டிவ் ஆப்டிக்ஸ் எனும் பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் சில பல்கலைக்கழகங்களிலும் இது தொடர்பான பாடங்கள் நடத்தப்படுகின்றன. சில பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் படிப்புகளாகவும் ஹோலோகிராபி டிப்ளமோ படிப்புகளை வழங்கத் தொடங்கி உள்ளன. வளமான வாய்ப்பு தேடி பாடத்திட்டங்களை தேர்வு செய்பவர்கள், எதிர்கால தொழில்நுட்பமான ஹோலோகிராபி பற்றியும் அறிவது அவசியம். இங்கும் ஹோலோகிராபி படிப்புகள் விரைவில் தோன்றும் என்பதிலும் சந்தேகமில்லை.

Next Story