மாவட்ட செய்திகள்

இனி சின்ன விஷயங்களும் சிக்கும்...! + "||" + Now the little things

இனி சின்ன விஷயங்களும் சிக்கும்...!

இனி சின்ன விஷயங்களும் சிக்கும்...!
மிகச்சிறிய உருவங்கள், எளிதில் கண்ணுக்கு புலப்படாத விஷயங்களை படம்பிடிக்க உதவுகிறது எளிமையான இந்த லாவா லென்ஸ்.
தண்ணீருக்குள் ஊர்ந்து செல்லும் சிறுபூச்சி, எறும்புகளின் கால்கள் அசைவு, டீ கோப்பைக்குள் நடக்கும் நுரை குமிழ் சுழற்சி, பூக்களில் மகரந்தத்தாளின் விரிவு என நுட்பமான விஷயங்களை சாதாரண கேமராவுடன் இணைத்து படம் பிடிக்க உதவுகிறது இந்த உருப்பெருக்கி லென்ஸ். 2 செ.மீ. அகலமுடைய இது, நுட்பமான விஷயங்களை தேடித் திரிந்து படம் பிடிக்கும் புகைப்பட பிரியர்களுக்கு வரப்பிரசாதம். அதிக விலைமதிப்புள்ள கேமராக்களால் செய்ய முடிந்த விஷயத்தை, கைத்தடி அளவுள்ள இந்த சாதனம் செய்து கொடுத்து விடுவது சிறப்பு. இனி இயற்கை - விலங்குகள் உலகை படம்பிடிக்கும் சேனல்களில் உங்கள் ‘கிளிக்’குகளும் அரங்கேறும்!