அனைத்து பொருட்களுக்கும் இ-ஸ்டிக்கர்


அனைத்து பொருட்களுக்கும் இ-ஸ்டிக்கர்
x
தினத்தந்தி 9 Aug 2018 3:57 PM IST (Updated: 9 Aug 2018 3:57 PM IST)
t-max-icont-min-icon

எதிர்காலத்தில் பொருட்கள் அனைத்தையும் இணைத்து செயல்படுத்த ‘இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ எனப்படும் பொருட்களின் இணைய தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.

பொருட்களை டெலிவரி செய்ய அல்லது இருக்கும் இடத்தை தேடி அறிய இந்தத் தொழில்நுட்பம் மிகவும் கைகொடுக்கும். இந்த தொழில்நுட்பத்தை விரைவுபடுத்தும் வகையில் வந்திருக்கிறது இந்த எலக்ட்ரானிக் ஸ்டிக்கர். பர்டியூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதை உருவாக்கி உள்ளனர். பேனா பென்சில், சிறிய நட்டுகள் உள்பட எந்தப் பொருளின் மீதும் வெட்டி ஒட்டிக்கொள்ளலாம். அனைத்துப் பொருட்களையும் பொருட்களின் இணையத்துடன் இணைக்க இந்த ஸ்டிக்கர் பெரிதும் கைகொடுக்கும்.

Next Story