கெட்ட கொழுப்பை மாற்றலாம்
உடல் பருமனுக்கும், அது தொடர்பான வியாதிகளுக்கும் காரணம் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளே.
கெட்ட கொழுப்புகளை நல்ல கொழுப்புகளாக மாற்ற நாம் உடற்பயிற்சி மேற்கொள்கிறோம், உணவு முறையில் மாற்றம் செய்கிறோம். விஞ்ஞானிகளோ மரபணு மருத்துவம், நானோ ஊசிகள் என பல்வேறு முறையில் இவற்றை கட்டுப்படுத்த முடியுமா? என்று முயற்சிக்கிறார்கள். இதற்கிடையில் நமது உடலோ, தேவையான நேரத்தில் மட்டும் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றி பயன்படுத்திக் கொள்கிறது. தற்போது கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உடல் செல்களின் உட்கருவான மைட்டோகாண்ட்ரியா, கெட்ட கொழுப்பை நல்லகொழுப்பாக மாற்றும் விதத்தை பின்பற்றி, செயற்கையாக கெட்ட கொழுப்புகளை மாற்றியமைக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டுள்ளனர். அவர்கள் ‘யு.சி.பி.1’ எனும் புரதப் பொருளை, கெட்ட கொழுப்புகள் படிந்துள்ள இடத்தில் ஊசி மூலம் செலுத்தி கெட்ட கொழுப்புகளை நல்லகொழுப்பாக மாற்றும் செயலை தூண்டுகிறார்கள். 3 வார காலத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. எலிகள் மீது நடந்த ஆராய்ச்சியில் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மேற்கொண்டு ஆய்வுகள் தொடர்கின்றன!
Related Tags :
Next Story