தூத்துக்குடியில் பலத்த காற்றுக்கு செல்போன் கோபுரம் சரிந்தது காலி இடத்தில் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக செல்போன் கோபுரம் சரிந்து விழுந்தது. காலி இடத்தில் அந்த கோபுரம் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக செல்போன் கோபுரம் சரிந்து விழுந்தது. காலி இடத்தில் அந்த கோபுரம் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பலத்த காற்று
தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. நேற்று காலை முதல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. ரோட்டில் புழுதியை வாரி இறைத்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
அதே நேரத்தில் தாளமுத்துநகர் அருகே உள்ள கணேசபுரத்தில் அமைக்கப்பட்டு இருந்த தனியார் செல்போன் கோபுரம், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு இருந்தது.
விபத்து தவிர்ப்பு
இந்த செல்போன் கோபுரம் நேற்று வீசிய காற்றில் அடியோடு சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த வீடுகளின் மீது விழாமல் காலி இடத்தில் விழுந்தது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து சேதம் அடைந்த செல்போன் கோபுரத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story