மாவட்ட செய்திகள்

அர்த்தமுள்ள வாசகங்களுடன் ஓவியங்கள் பூங்கா அமைத்து புழல் போலீஸ் நிலையம் பராமரிப்பு + "||" + Paintings with meaningful words Set the park Puzhal police station maintenance

அர்த்தமுள்ள வாசகங்களுடன் ஓவியங்கள் பூங்கா அமைத்து புழல் போலீஸ் நிலையம் பராமரிப்பு

அர்த்தமுள்ள வாசகங்களுடன் ஓவியங்கள் பூங்கா  அமைத்து புழல் போலீஸ் நிலையம் பராமரிப்பு
அர்த்தமுள்ள வாசகங்களுடன் ஓவியங்கள் வரையப்பட்டு, பூங்கா அமைத்து புழல் போலீஸ் நிலையம் பராமரிக்கப்பட்டு வருவதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழலில் உள்ள போலீஸ் நிலையத்தில் இடதுபுறத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட பழைய வாகனங்கள் மக்கி குப்பை போல் இருந்தன. போலீஸ் நிலையம் முன் பகுதி பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது. கொடி, செடிகள் வளர்ந்து பாம்புகள், வி‌ஷப்பூச்சிகள் உலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.


இதையடுத்து போலீஸ் நிலையம் உள்ள பகுதியை சீரமைக்க உதவி கமி‌ஷனர் பிரபாகரன் போலீசாருக்கு அறிவுறுத்தினார். அதன்படி இன்ஸ்பெக்டர் நடராஜ் மேற்பார்வையில் பழைய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போலீஸ் நிலையத்தின் முன்பகுதியில் இருபக்கங்களிலும் பூங்கா போல் அமைத்து அலங்கார செடிகள் வைத்து பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.

போலீஸ் நிலைய மதில் சுவரில் அர்த்தமுள்ள வாசகங்களுடன் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் அந்த வாசகங்களை படித்து பார்க்கின்றனர்.

சென்னை புறநகரில் உள்ள புழல் போலீஸ் நிலையம் மற்ற போலீஸ் நிலையங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என அப்பகுதி மக்கள் பாராட்டு     தெரிவிக்கின்றனர். இதேபோல், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.