மாவட்ட செய்திகள்

திருமணத்துக்கு காதலனின் பெற்றோர் மறுப்பு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + For marriage Lover parental denial young lady Suicide by hanging

திருமணத்துக்கு காதலனின் பெற்றோர் மறுப்பு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணத்துக்கு காதலனின் பெற்றோர் மறுப்பு: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திருமணத்துக்கு காதலனின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் மனம் உடைந்த இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பூந்தமல்லி,

மதுரவாயலை அடுத்த புளியம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு(வயது 42). இவருடைய மகள் சரண்யா(17). இவர், பிளஸ்–2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட சரண்யா நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை திறந்து பார்த்தபோது சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகளின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.


சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தற்கொலை செய்து கொண்ட சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

அதில் சரண்யாவும், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற ஜாக்(21) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர், அடிக்கடி சரண்யாவின் பெற்றோர் இல்லாதநேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று தனியாக சந்தித்துபேசி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரவிந்த்–சரண்யா இருவரும் சந்தித்து பேசிக்கொண்டு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அரவிந்தை கண்டித்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த சரண்யாவின் பெற்றோர், தங்கள் மகளை அரவிந்துக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இது தெடர்பாக அரவிந்தின் பெற்றோரிடம் சம்மதம் கேட்க சென்றனர். ஆனால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரவிந்தின் பெற்றோர், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கவும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த சரண்யா, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பண்ருட்டி அருகே: தூக்குப்போட்டு இளம்பெண் சாவு - தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் இறந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
2. காதலித்து திருமணம் செய்த காவலருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் உறவினர்களுடன் தர்ணா
காதலித்து திருமணம் செய்த காவலருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
3. காதல் கணவருடன் தகராறு: 5 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
ஆத்தூர் அருகே காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 5 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. இளம்பெண் கற்பழித்துக் கொலையா? போலீஸ் விசாரணை
வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் உயிருக்கு போராடிய இளம்பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
5. திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்ற கள்ளக்காதலன்
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, பிணத்தை கிணற்றில் வீசிய வாலிபர் அருப்புக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.