கருணாநிதி இறுதி ஊர்வலத்தை பார்த்த விவசாயி சாவு


கருணாநிதி இறுதி ஊர்வலத்தை பார்த்த விவசாயி சாவு
x
தினத்தந்தி 10 Aug 2018 4:00 AM IST (Updated: 10 Aug 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை தொலைக் காட்சியில் நேற்று முன்தினம் இரவு பார்த்து கொண்டிருந்த இவர் கருணாநிதியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

குளித்தலை,

குளித்தலை அருகேயுள்ள மருதூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(வயது 80). விவசாயியான இவர் தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்பு மொழிப்போர் போராட்டத்தில் கலந்துகொண்டு சட்ட நகலை எரித்து 36 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் கைதியாக இருந்துள்ளார். கருணாநிதி குளித்தலை தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்டபோது அவருடன் தேர்தல் பணியை மேற்கொண்டு இருக்கிறார். நீண்டகால தி.மு.க. கட்சிக்காரரான இவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை தொலைக் காட்சியில் நேற்று முன்தினம் இரவு பார்த்து கொண்டிருந்த இவர் கருணாநிதியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் தெரிவித்தனர். 

Next Story