ஊழியர்கள் பணிக்கு திரும்ப காலதாமதம்: பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைப்பு


ஊழியர்கள் பணிக்கு திரும்ப காலதாமதம்: பணிமனையில் பஸ்கள் நிறுத்தி வைப்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 3:21 AM IST (Updated: 10 Aug 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

மேலூரில் ஊழியர்கள் பணிக்கு திரும்ப காலதாமதம் ஏற்பட்டதால் பஸ்கள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் மாணவ-மாணவிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

மேலூர்,


தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி ஒருநாள் அரசு விடுமுறைக்கு மேலூரில் நேற்றுகாலை முதல் இயல்பு வாழ்க்கை திரும்பியது. வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை திறக்கப்பட்டன.

இந்நிலையில் மேலூர் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து கிராமப்புறங்களுக்கான 67 வழித்தடங்கள் வழியாக 69 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்குவெளி மாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் ஏராளமானோர் வேலை பார்க்கின்றனர். அவர்கள் அனைவரும் கருணாநிதி இறந்த ஒரு நாள் அரசு விடுமுறைக்கு சென்றவர்கள் வேலைக்கு திரும்ப நேற்று காலதாமதம் ஆனது. இதனால் 13-க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ்கள் மேலூர் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதையடுத்து கிராமப்புற வழித்தடத்தில் டவுன் பஸ்கள் இயங்காமல் பள்ளிகள் மற்றும் கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் காலை நேரத்தில் பெரும் அவதி அடைந்தனர். மதிய நேரத்தில் அனைத்து பஸ்களும் இயங்கத்தொடங்கின. 

Next Story