குமாரசாமியின் முதல்-மந்திரி பதவியேற்பு விழாவுக்கு ரூ.42 லட்சம் செலவு
7 நிமிடத்தில் நிறைவடைந்த குமாரசாமியின் முதல்-மந்திரி பதவியேற்பு விழாவுக்காக ரூ.42 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுக்கு ரூ.8.72 லட்சமும், நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.1 லட்சமும் செலவிடப்பட்டு இருக்கிறது.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) ஆகிய எந்த கட்சிகளுக்கும் தனித்து ஆட்சியை பிடிப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜனதா சார்பில் எடியூரப்பா மே மாதம் 17-ந் தேதி முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.
பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்த எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, காங்கிரசும்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. ஜனதாதளம்(எஸ்) கட்சியின் அப்போதைய மாநில தலைவரும், தேவேகவுடாவின் மகனுமான எச்.டி.குமாரசாமி முதல்-மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சி சார்பில் அப்போதைய மாநில தலைவர் பரமேஸ்வரர் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இந்த பதவி ஏற்பு விழா கடந்த மே மாதம் 23-ந் தேதி விதானசவுதா முன்பு நடந்தது.
இந்த விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அவருடைய தாய் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், மே மாதம் 23-ந் தேதி 7 நிமிடங்கள் மட்டும் நடந்த பதவியேற்பு விழாவுக்காக கர்நாடக அரசு சுமார் ரூ.42 லட்சத்தை செலவு செய்துள்ளது தகவல் அறியும் உரிமை ஆர்வலர் பெற்ற தகவல் மூலம் தெரியவந்துள்ளது. 2 சொகுசு ஓட்டல்களில் தங்குவதற்காக ரூ.37 லட்சத்து 53 ஆயிரத்து 536 செலவிடப்பட்டு உள்ளது. தனியார் ஓட்டல் ஒன்றில் இருந்து பதவியேற்பு விழாவுக்காக டீ, காபி, தின்பண்டங்களுக்கு ரூ.4.35 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் 2 சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். மே மாதம் 23-ந் தேதி காலை 9.49 மணியில் இருந்து 24-ந் தேதி அதிகாலை 5.34 மணி வரை சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.8 லட்சத்து 72 ஆயிரத்து 485-ம், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 287-ம் செலவு செய்யப்பட்டு உள்ளது. சாப்பாடு மற்றும் ஜூசுக்கு ரூ.71,025-ம், குளிர்பானங்களுக்கு ரூ.5 ஆயிரத்தையும் அரவிந்த் கெஜ்ரிவால் செலவு செய்தது குறிப்பிடத்தக்கது. தனியார் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதிக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 443 செலவிடப்பட்டு உள்ளது.
மேலும் சொகுசு ஓட்டல்களில் தங்கிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உத்தர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், தேஜஸ்வி யாதவ், கமல்ஹாசன் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-ம் செலவாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு ரூ.64 ஆயிரமும், ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி ஹெமந்த் சூரனுக்கு ரூ.38 ஆயிரத்து 400-ம், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு ரூ.64 ஆயிரமும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஓவைசிக்கு ரூ.38 ஆயிரத்து 400-ம், ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி பாபூலால் மாரண்டிக்கு ரூ.45,952-ம் செலவிடப்பட்டு உள்ளது. ஆனால் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு செலவிடப்பட்ட தொகையானது வெளியிடப் படவில்லை.
கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 13-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் சித்தராமையா முதல்-மந்திரியாக பதவியேற்றபோதும், கடந்த மே மாதம் 17-ந் தேதி பா.ஜனதா கட்சி சார்பில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவியேற்றபோதும் கர்நாடக அரசின் உபசரிப்பு அமைப்பு சார்பில் செலவு செய்யப்படவில்லை. ஆனால், குமாரசாமியின் பதவியேற்பு விழாவுக்கு கர்நாடக அரசின் உபசரிப்பு அமைப்பு செலவு செய்துள்ளது.
இதற்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள், லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, சுதந்திர போராட்ட தியாகி துரைசாமி உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் பணத்தை விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்கும், மாநில வளர்ச்சி பணிகளுக்கு செலவு செய்வதற்கும் பயன்படுத்தாமல் தலைவர்களின் செலவுக்கு அரசு பணத்தை செலவழிப்பதா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அத்துடன், இந்த முழுசெலவையும் விழா ஏற்படுத்திய கட்சியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story