தூத்துக்குடியில் இருந்து சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்

தூத்துக்குடியில் இருந்து சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Aug 2018 1:42 PM IST (Updated: 10 Aug 2018 1:42 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இருந்து சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் சாலை விதிகளை மதித்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆடி அமாவாசை திருவிழா

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி விருதுநகர் மாவட்டம் தானிப்பாறையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் திருவிழாவுக்கு தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

கடந்த காலங்களில் நடந்த விழாவின்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மொத்தம் 21 ஆண்கள், 28 பெண்கள் அடித்து செல்லப்பட்டு உள்ளனர். எனவே பக்தர்கள் பாதுகாப்பு கருதி கோவிலுக்கு நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) வரை காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பான பயணம்

ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் சென்றும், சாலை விதிகளை கடைபிடித்தும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story