பரமத்தி வேலூர் காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை


பரமத்தி வேலூர் காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2018 3:30 AM IST (Updated: 11 Aug 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

பரமத்தி வேலூர்,

தற்போது மேட்டூர் அணைக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அனையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதையொட்டி பரமத்தி வேலூர் வட்டம் சோழசிராமணியில் இருந்து அனிச்சம்பாளையம் வரை உள்ள காவிரி கரையோர பகுதி மக்களுக்கும், மீனவர்களுக்கும் பொதுப்பணித் துறையினர் மற்றும் பரமத்தி வேலூர் பேரூராட்சியினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்கி குளித்தல், துணி துவைத்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல் மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story