மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை-வேளச்சேரி ரெயில் இன்று காலை 11.30 மணி முதல் மதியம் 3.25 மணி வரையும், வேளச்சேரி-கடற்கரை காலை 11.35 மணி முதல் மதியம் 3.25 வரையும், கடற்கரை-வேளச்சேரி ரெயில் நாளை காலை 11.40 மணி முதல் மதியம் 3.20 மணி வரையும், வேளச்சேரி-கடற்கரை காலை 11.30 மணி முதல் மாலை 3.10 மணி வரையும் ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம்-கடற்கரை இரவு 11.30 மணி, கடற்கரை-தாம்பரம் இரவு 11.05, 11.30, 11.59 மணி ரெயில்கள், கடற்கரை- தாம்பரம் அதிகாலை 4 மணி ரெயில்கள் இன்றும், தாம்பரம்-கடற்கரை அதிகாலை 4, 4.20, 4.40, 5.15 மணி ரெயில்கள் நாளையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு-கடற்கரை இரவு 10.15, 11.10 மணி ரெயில் கள் தாம்பரம்-கடற்கரை வரையும், கடற்கரை- செங்கல்பட்டு அதிகாலை 3.55, 4.40, 5 மணி ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையேயும் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story