கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு


கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 9:55 PM GMT (Updated: 10 Aug 2018 11:38 PM GMT)

2018-19-ம் ஆண்டு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ராஜாமணி கூறி உள்ளார்.

திருச்சி, 


திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2018-19-ம் ஆண்டு பாரத பிரதமர் கல்வி உதவித்தொகைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2018-19-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக், பி.டி.எஸ்., எம்.பி.பி.எஸ்., பி.எட்., பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.பார்ம், பி.எஸ்சி. நர்சிங், எல்.எல்.பி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., போன்ற பொறியியல் கல்வி மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளில் சேர்ந்து 2018-ல் முதலாம் ஆண்டு படிக்கும் முன்னாள் படைவீரர்களின் மகன், மகளுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக விண்ணப்பித்திட புதுடெல்லியில் உள்ள மைய முப்படைவீரர் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19-ம் ஆண்டுக்கான உரிய விண்ணப்ப படிவம் ஆன்லைன் மூலம் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்துவிண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த விண்ணப்ப படிவத்தினை நன்கு படித்து அறிந்து பின்னர் மூன்று An-n-exu-re படிவத்தினை பதிவிறக்கம் செய்த பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பூர்த்தி செய்து மேற்கையொப்பம் பெறப்பட வேண்டும். அதனுடன் பிறஆவணங்களையும் ஆன்லைன் மூலம் ஸ்கேன் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்திட கடைசி தேதியான வருகிற நவம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு சென்றடைய வேண்டும். எந்த காரணம் கொண்டும் இந்த காலக்கெடுவுக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மைய முப்படைவீரர் வாரியம் மூலம் நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். 

Next Story