வாகனத்தில் அடிபட்டு குட்டி குரங்கு சாவு: மார்போடு அணைத்தபடி தாய் குரங்கு பாசப்போராட்டம்


வாகனத்தில் அடிபட்டு குட்டி குரங்கு சாவு: மார்போடு அணைத்தபடி தாய் குரங்கு பாசப்போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2018 11:15 PM GMT (Updated: 10 Aug 2018 10:02 PM GMT)

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு குட்டி குரங்கு இறந்தது. குட்டி இறந்தது தெரியாமல் அதனை தூக்கி வைத்து மார்போடு அணைத்தபடி தாய் குரங்கு பாசப்போராட்டம் நடத்தியது.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை வாகன போக்குவரத்து மிகுந்தது ஆகும். இந்த சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் உணவு வகைகளை ஆங்காங்கே வீசி செல்வதால், அதை தின்பதற்காக குரங்குகள் அங்கு படையெடுக்கின்றன. அவ்வாறு சுற்றித்திரியும் போது சில நேரங்களில் வாகனங்களில் அடிபட்டு குரங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. எனவே குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையை வாகனங்களில் கடக்கும் சுற்றுலா பயணிகள் உணவு பொருட்களை சாலையோரங்களில் வீசி செல்லக் கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ள னர். ஆனாலும் அது குறைந்த பாடில்லை. இந்த நிலையில் நேற்று குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றித்திரிந்த ஒரு குட்டி குரங்கு, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்தது.

பின்னர் அங்கு வந்த தாய் குரங்கு, குட்டி இறந்தது கூட தெரியாமல் அதை தூக்கி வைத்து மார்போடு அணைத்த படி பாசப்போராட்டம் நடத் தியது. இதையடுத்து அந்த வழியே ஆள் நடமாட்டம் அதிகரித்ததால், தன்னுடனே குட்டியின் உடலையும் தர, தரவென இழுத்துக்கொண்டு சாலையோரத்திற்கு சென்றது. பின்னர் அங்குள்ள ஒரு புதருக்குள் குட்டியின் உடலை மறைத்து வைத்துவிட்டு, மீண்டும் சாலைக்கு வந்தது. தாய் குரங்கின் இந்த செயலை கண்ட வாகன ஓட்டிகள் கண் கலங்கினர். 

Next Story