கொளத்தூர் பகுதியில் மழை; மரம் வேரோடு சாய்ந்தது


கொளத்தூர் பகுதியில் மழை; மரம் வேரோடு சாய்ந்தது
x
தினத்தந்தி 11 Aug 2018 5:27 AM IST (Updated: 11 Aug 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே உள்ள ஆண்டிகொளத்தூர் பகுதிகளில் பெய்த பாலத்த காற்றுடன் பெய்த மழையில் திரவுபதி அம்மன் மரம் வேரோடு சாய்ந்தது.

வரதராஜன்பேட்டை, 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொளத்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக, கொளத்தூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே இருந்த பழமை வாய்ந்த இச்சி மரம் திடீரென்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்போது அந்தப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படவில்லை. 

Next Story