மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்:ஒருநபர் ஆணையத்தின் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியது + "||" + One member of the Commission The 2-stage investigation began

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்:ஒருநபர் ஆணையத்தின் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்:ஒருநபர் ஆணையத்தின் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியது
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 2-ம் கட்ட விசாரணை தொடங்கியது. இதில் துப்பாக்கி சூட்டில் பலியான மாணவியின் தாயார் உள்பட 10 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

அருணா ஜெகதீசன் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல் தைரியமாக பிரமான பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூறினார். அதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டது.

விசாரணை

அதன்படி இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 440-க்கும் மேற்பட்டவர்கள் பிரமான பத்திரம் தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தெற்கு பீச் ரோட்டில் உள்ள ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகத்தில் 2-ம் கட்ட விசாரணை நேற்று முன்தினம் தொடங்கியது.

கடந்த 2 நாட்களாக துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் 12 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டது. இதில் 6 பேர் நேற்று முன்தினமும், 4 பேர் நேற்றும் விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

ஆம்புலன்ஸ் மூலம்

அப்போது துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த தூத்துக்குடி கருணாநிதி நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் சம்மன் அளிக்கப்பட்டு இருந்தது. அவர் நடக்க முடியாத நிலையில் இருந்தார். இதனால் ஆம்புலன்ஸ் மூலம் விஜயகுமார் விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார். அவர் ஸ்டெக்சரில் படுத்து இருந்த நிலையிலேயே வாக்குமூலம் அளித்தார்.

துப்பாக்கி சூட்டில் இறந்த மாணவி சுனோலின் தாயார் வினிதா ஆணையம் முன்பு வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் கூறும் போது, “எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அன்று நடந்த சம்பவங்களை நீதிபதி முன்பு விளக்கி கூறி உள்ளேன்“ என்று தெரிவித்தார்.