ஓட்டப்பிடாரம் அருகே அமைச்சர் ராஜலட்சுமி பள்ளியில் ஆய்வு


ஓட்டப்பிடாரம் அருகே அமைச்சர் ராஜலட்சுமி பள்ளியில் ஆய்வு
x
தினத்தந்தி 11 Aug 2018 9:10 AM IST (Updated: 11 Aug 2018 9:10 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் ராஜலட்சுமி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் ராஜலட்சுமி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் ஆய்வு

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்வதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று வந்தார். அவரை பள்ளி நிர்வாக இயக்குனர் பாலமுருகன் வரவேற்றார். தொடர்ந்து பள்ளி வகுப்பறைக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆதிதிராவிட மாணவ-மாணவிகளுக்கான அரசு உதவி கிடைக்கிறதா? என கேட்டறிந்தார். மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

சிறந்த பள்ளியாக...

அதன்பிறகு பள்ளிக்கூட வகுப்பறை, விளையாட்டு மைதானம், அறிவியல் ஆய்வகம், விடுதி, கழிப்பறை, தங்கும் அறை, சமையல் கூடம், பள்ளி மாணவ-மாணவிகள் சாப்பிடும் இடம் ஆகியவற்றை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளிக்கூடத்தில் சில கட்டிடங்களில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகளை மாற்ற வேண்டும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிப்பதால், 24 மணி நேரம் மருத்துவர்கள் பணியமர்த்த வேண்டும். மாணவ-மாணவிகள் உணவு சாப்பிடும் கூடத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். இந்த பள்ளியை தமிழகத்தில் சிறந்த பள்ளியாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.

யார்-யார்?

ஆய்வின் போது, ஆதிதிராவிட நலத்துறை இயக்குநர் முரளிதரன், உதவி செயலாளர் ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் கீதா, பள்ளி நிர்வாக இயக்குநர் பாலமுருகன், பள்ளி நிர்வாக கண்காணிப்பாளர் சரோஜா கருப்பசாமி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், யூனியன் ஆணையாளர் இசக்கியப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம், உதவி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி, பள்ளி ஆசிரியர் நிர்மலா பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story