தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தூத்துக்குடியில் அரசியல் கட்சியினர் மவுன ஊர்வலம்
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தூத்துக்குடியில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம் நடந்தது.
தூத்துக்குடி,
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தூத்துக்குடியில் அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம் நடந்தது.
மவுன ஊர்வலம்
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. ஊர்வலம் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அண்ணா சிலை அருகே இருந்து தொடங்கியது. ஊர்வலத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஊர்வலம் பழைய பஸ் நிலையம், குரூஸ்பர்னாந்து சிலை, டபிள்யூ.ஜி.சி. ரோடு வழியாக பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடந்தது.
யார்-யார்?
ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் முருகன், சேவியர், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், பா.ஜனதா சண்முகசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ரமேஷ், நக்கீரன், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால், தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், த.மா.கா. வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், எஸ்.டி.பி.ஐ. கட்சி காதர் மைதீன், மனிதநேய மக்கள் கழகம் மோத்தி, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், ஆதித்தமிழர் கட்சி மனோகர், மதசார்பற்ற ஜனதாதளம் சொக்கலிங்கம், திராவிடர் கழகம் பெரியாரடியான், தமிழக வாழ்வுரிமை கட்சி கிதர்பிஸ்மி, தொழில் அதிபர் எஸ்.டி.பொன்சீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story