காயல்பட்டினத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. பேட்டி
காயல்பட்டினத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
ஆறுமுகநேரி,
காயல்பட்டினத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று காயல்பட்டினத்தில் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது;-
போதை பொருட்கள்
நடமாட்டம்
இந்தியாவில் மதுக்கடை இல்லாத நகரசபை காயல்பட்டினம் தான். அப்படிப்பட்ட காயல்பட்டினத்தில் தற்போது போதை பொருள் நடமாட்டம் அதிகமாகஉள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்டவர்கள் போதைக்கு அடிமையாகும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள உளவுத்துறை உயர் அதிகாரியிடம் புகார் கொடுத்து உள்ளேன். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், அவர்களுக்கு சப்ளை செய்பவர்களை கண்டுபிடித்து கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடமும் மனு கொடுத்து உள்ளேன். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
ஆர்ப்பாட்டம்
சிறப்பு மிக்க இந்த நகரில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சில இடங்களில் போதை பொருள் விற்பவர்கள், இளைஞர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள்.
இதற்கு முறையாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் காயல்பட்டினம் பகுதி மக்களை திரட்டி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முகமது அசன், துணை தலைவர் மன்னார் பாதூர் அஸ்ஷப், நகர முஸ்லிம் லீக் செயலாளர் அபுசாலி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story