சாதாரண குழந்தைகளாக வளரும் அரச குடும்ப குழந்தைகள்!


சாதாரண குழந்தைகளாக வளரும் அரச குடும்ப குழந்தைகள்!
x
தினத்தந்தி 11 Aug 2018 12:08 PM GMT (Updated: 11 Aug 2018 12:08 PM GMT)

தங்கள் குழந்தைகளை சாதாரணமாக வளர்க்க விரும்புவதாகவும், அவ்வாறு வளர்ப்பதையே ராணி விரும்புகிறார் என்றும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்திருக்கிறார்.

ங்கிலாந்தில் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் அரச குடும்ப குழந்தைகளுக்கு என்று பல விதிமுறைகள் இருக்கின்றன. அவர்களால் பிற குழந்தைகள் போல வாழ இயலாது.

ஆனால் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கத்தை இளவரசி டயானா அரச குடும்பத்து மருமகளானவுடன் மெதுவாக தகர்க்க முயற்சித்தார்.

ஆனால் டயானாவின் கொள்கைகளில் எலிசபெத் ராணிக்கு கருத்து வேறுபாடு இருந்த காரணத்தால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வில்லியம் -கேட் தம்பதியினர் தங்கள் குழந்தைகளை சாதாரணக் குழந்தைகள் போன்று வளர்க்க வேண்டும் என்பதே தமது ஆசை எனக் கூறியுள்ள நிலையில், இங்கிலாந்து ராணியும் தனது ஆசையும் அதுதான் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது அரச குடும்பக் குழந்தைகளில் இளவரசர் ஜார்ஜ், லண்டலில் உள்ள தாமஸ் பெட்டசீ பள்ளியில் இரண்டாம் வகுப்பில் அடி எடுத்து வைக்கவிருக்கிறார். உலக நடைமுறைகளோடு பொருந்திக் கொள்வதற்கு ஜார்ஜுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

அவரைப் போன்று அவரது சகோதரர்களுக்கும் இந்த முறையே கடைப்பிடிக்கப்படவிருக்கிறது. அரச குடும்பத்துக் குழந்தைகள் பொது இடங்களில் பிரபலமாக கவனிக்கப்படுவதை ராணி எலிசபெத் விரும்பவில்லை. மாறாக சாதாரண குடும்பத்து வாழ்க்கை முறையையே அவர்கள் வாழ வேண்டும் என அவர் விரும்புவதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். 

Next Story