மாவட்ட செய்திகள்

ஒருநாள் பாதுகாப்புச் செலவு ரூ. 18 லட்சம்! + "||" + One day security cost is Rs. 18 lakhs

ஒருநாள் பாதுகாப்புச் செலவு ரூ. 18 லட்சம்!

ஒருநாள் பாதுகாப்புச் செலவு ரூ. 18 லட்சம்!
‘பேஸ்புக்’ அதிபர் மார்க் ஷுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு நாளும் ரூ. 18 லட்சம் செலவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஷுக்கர்பெர்க் பொறுப்பு வகிக்கிறார்.

தற்போது அவரது தினசரி பாதுகாப்புக்காக 27 ஆயிரம் டாலர்கள் (ரூ. 18.52 லட்சம்) செலவு செய்யப்படுவதாக ஆய்வு நிறுவனம் ஒன்று கூறுகிறது.

ஷுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக வருடத்துக்கு ரூ. 68 கோடி வரை செலவு செய்யப்படுவதாக அந்த ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஷுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக பேஸ்புக் நிறுவனத்தால் செலவு செய்யப்பட்ட தொகை ரூ. 50 கோடி. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பேஸ்புக்கின் பங்குகள் மிக மோசமான நிலைக்குச் சென்றிருந்தது.

இச்சூழலில் ஷுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக 10 மில்லியன் டாலருக்கு மேல் பேஸ்புக் நிறுவனம் செலவு செய்து இருப்பது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷுக்கர்பெர்க்கின் போலோ எல்டோ வீட்டில் மட்டும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 16 பணியாளர்கள் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள் என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. பேஸ்புக்கின் 3 கோடி பயனாளர்கள் பிறந்த தேதி, கல்வி வரலாறு, மத விருப்பம், பிற விவரங்கள் திருட்டு
பேஸ்புக்கில் மிகப்பெரிய கசிவு. 3 கோடி பயனாளர்களின் பிறந்த தேதி, கல்வி வரலாறு, மத விருப்பத் தேர்வுகள் மற்றும் பிற விவரங்கள் திருடப்பட்டுள்ளன.
3. போலி செய்திகளை எங்களுடைய தளத்தில் அனுமதிக்க மாட்டோம் தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக், டுவிட்டர் உறுதி
போலி செய்திகளை எங்களுடைய தளத்தில் அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் ஆணையத்திடம் பேஸ்புக், டுவிட்டர் உறுதியளித்துள்ளது.
4. பயனாளர்கள் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவல்: பேஸ்புக் நிறுவனம் தகவலால் அதிர்ச்சி
சமூக வலதளங்களில் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், பயனாளர்கள் 5 கோடி பேரின் கணக்குகளில் ஹேக்கர்கள் ஊடுருவியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
5. பேஸ்புக் புதிய நிர்வாக இயக்குநராக அஜித் மோகன் நியமனம்
பேஸ்புக் நிறுவனத்தின், இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக அஜித் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.