300 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வாங்க ஆளில்லை!
சுமார் 300 கோடி ரூபாய் லாட்டரி பரிசுத் தொகை கோரப்படாமல் இருக்கிறது.
கனடாவின் ஒன்டாரியோ, ஆல்பர்ட்டா, கியூபெக், பிரிட்டீஷ் கொலம்பியா பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகளவு லாட்டரியில் வென்ற பணத்தை வாங்காமல் உள்ளனர்.
அவர்களால் கோரப்படாமல் இருக்கும் பரிசுத்தொகை 46 மில்லியன் டாலர்கள். அதாவது, ரூ. 315 கோடி.
பிரிட்டீஷ் கொலம்பியாவில் மட்டும் ரூ. 50 கோடி பணத்தை வாங்கிக்கொள்ள பரிசை வென்றவர்கள் வரவில்லை. ஒன்டாரியோவில் ரூ. 149 கோடி பணத்தை வாங்கிச் செல்ல ஆட்கள் வரவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஒன்டாரியோ லாட்டரி கார்ப்பரேஷன் தலைவர் டிட்டா கூறுகையில், லாட்டரியில் வென்ற பரிசுகளை வாங்காமல் இருப்பவர்கள் பெரும்பாலும் டிக்கெட்களை எங்கு வைத்தோம் என மறந்திருக்கலாம், தொலைத்திருக்கலாம் அல்லது தவறுதலாக தூக்கிப் போட்டிருக்கலாம்.
லாட்டரியில் விழும் பரிசுகளை குலுக்கல் நடந்த 52 வாரங்களுக்குள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது விதியாகும். அப்படி வாங்காத பட்சத்தில் அந்தப் பரிசுத் தொகைகள் அடுத்து நடக்கும் சிறப்பு லாட்டரி குலுக்கல் பரிசுத் தொகையோடு சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story