இல்லுமினாட்டிகளின் பிடியில் உலகம்..!
‘இல்லுமினாட்டி’ என்ற லத்தீன் வார்த்தை, தற்காலத்தில் பலருடைய அச்சத்திற்கு காரணமாக மாறியுள்ளது.
‘இல்லுமினாட்டி’ என்பதற்கு ‘ஒளி பெற்றவர்கள்’ அல்லது ‘அறிவு ஜீவிகள்’ என்று அர்த்தம். மறைமுகமாக உலகை ஆட்சி செய்கின்ற அமைப்பாக ‘இல்லுமினாட்டி’ கருதப்படுகிறது. இந்த அமைப்பை பற்றிய பல செய்திகள் ஊகங்களாகவும், கற்பனையாகவும் தோன்றினாலும் அதில் பல உண்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.
மக்கள் எதை தேர்வு செய்ய வேண்டும், எதை உண்ண வேண்டும், எதை பயன்படுத்த வேண்டும் என்பதை இல்லுமினாட்டிகளே மறைமுகமாக முடிவு செய்கிறார்கள். ஊடகங்கள், விளம்பரங்கள் வழியாக அவர்களது கருத்து திணிப்பு நம் மனதில் பதிந்து விடுகிறது. எது நம் உடலுக்கு வலிமை தரும், எது நம்மை ஆரோக்கியமாக வைக்கும், எந்த எண்ணெய் சிறந்தது என்று அனைத்தையுமே அவர்களே நமக்கு கற்றுத் தருகிறார்கள். மருத்துவச் சந்தைதான் இல்லுமினாட்டிகளுக்கு மிகுந்த லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. உயிரைக் காப்பாற்ற மக்கள் எதையும் செய்வார்கள் என்ற மனநிலையைப் பணமாக மாற்றும் யுத்தியைக் கொண்டு வந்தவர்கள் இல்லுமினாட்டிகளே என்ற கருத்து நிலவுகிறது.
இல்லுமினாட்டி அமைப்பு தொடங்கப்பட்டதன் உண்மை நோக்கம் வித்தியாசமானது. 1776 மே 1-ந்தேதி, ஜெர்மனியின் பவாரியா பகுதியில் ஆதம் வெய்ஷாப்த் என்ற பேராசிரியர், நான்கு மாணவர்களுடன் சேர்ந்து ‘நேர்த்தியானவர்கள்’ (பெர்பெக்டபிலிஸ்ட்ஸ்) என்ற அமைப்பைத் தொடங்கினார். மதங்களில் உள்ள மூடநம்பிக்கைகளைப் புறந்தள்ளி, அறிவியல் சார்ந்த கருத்துக்களால் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் அவர்கள் ஆர்வம் காட்டினர்.
இந்த ‘நேர்த்தியானவர்கள்’ குழு, சமூகத்தின் அசைவுகளைக் கண்காணித்து அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்தது. அரசாங்கத்தின் கட்டமைப்பில் ஊடுருவி அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து, சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவர்கள் விரும்பினர். 1778 முதல் ‘இல்லுமினாட்டி’ என்ற பெயரைப் இக்குழுவினர் பெற்றனர். பல அறிஞர்களும், அரசியல்வாதிகளும் இல்லுமினாட்டி குழுவோடு கைக்கோர்த்து செயல்பட்டனர். 1784-ம் ஆண்டு, ‘இல்லுமினாட்டி’ குழுவுக்கு ஜெர்மனி நாட்டு அரசு தடை விதித்தது. அதே நேரத்தில், மற்ற ஐரோப்பிய நாடுகளில் ‘இல்லுமினாட்டி’ குழு வளர்ச்சி கண்டது. பிரான்ஸ் நாட்டில் மன்னராட்சிக்கு எதிராக ஏற்பட்ட மாபெரும் புரட்சிக்கு இல்லுமினாட்டி களே காரணம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.
1800-களில், அறிவியல் முன்னேற்றத்துக்கான ஆய்வுகளை செயல்படுத்துவதில் இந்த இல்லுமினாட்டிகள் ஆர்வம் காட்டினர். அதற்கான முதலீடுகளைப் பெறுவதற்காக, பெரும் பணக்காரர்கள் சிலரின் உதவியை அவர்கள் நாடினர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 13 பணக்கார குடும்பங்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தன. சிறிது காலத்தில், இல்லுமினாட்டிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் பல்வேறு அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இந்த வெற்றியில் ருசிகண்ட பணக்கார குடும்பங்கள், இல்லுமினாட்டி குழுவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அவர்களின் மூலம் லாபம் பார்க்க ஆரம்பித்தனர். அதனால் சமூகத்தின் அறிவியல் சார்ந்த முன்னேற்றத்திற்காக ஆர்வமுடன் செயல்பட்டு வந்த இல்லுமினாட்டி குழு உறுப்பினர்களுக்கு, இந்த 13 குடும்பங்களின் உறுப்பினர்கள் தலைமை ஏற்றனர். போர், புரட்சி என்று பல்வேறு சிக்கல்களில் உலக நாடுகள் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், இல்லுமினாட்டிகள் பல ரகசிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். ஒவ்வொரு காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற வகையில், பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து லாபம் ஈட்ட அவர்கள் முயற்சி செய்தனர்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் இல்லுமினாட்டிகளின் பங்கு அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது. நாடுகளுக்கு இடையே பகை உணர்வைத் தூண்டிவிட்டு, இரு தரப்பிலும் ஆயுத வியாபாரம் செய்து இல்லுமினாட்டிகள் லாபம் ஈட்டினர்.
புது விதமான தொழில் எந்திரங்களின் கண்டுபிடிப்பிலும், வேளாண் புரட்சியிலும் இல்லுமினாட்டிகளின் பங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அறிவியல் முன்னேற்றம் என்ற பெயரில், மக்களை அழிவின் பாதையில் நடத்திச் செல்லும் பல ஆய்வுகளுக்கு காரணமாக இருப்பவர்களும் இல்லுமினாட்டிகளே.
மரபணு மாற்ற விதைகளின் உற்பத்தி, நவீன மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் இல்லுமினாட்டிகளின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இயற்கை சார்ந்த வாழ்வில் இருந்து நம்மைப் பிரித்து, செயற்கையை நோக்கி அழைத்துச் செல்வதில் இல்லுமினாட்டிகள் மிகுந்த ஆர்வமாக செயல் படுகின்றனர்.
இயற்கையாக கிடைக்கும் அனைத்தையும் செயற்கையாக மட்டுமே தயாரித்து கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்பதே இல்லுமினாட்டிகளின் கணக்கு. கேன் தண்ணீரே சுத்தமானது, சோறு சமைத்த நீரில் சத்து வெளியேறி விடும், ரத்தத்தில் சர்க்கரை அதிகம் இருந்தால் நோய், தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அதிகம் என்பது போன்ற பல தவறான கருத்துக்களை உருவாக்கி நம்மை நம்பச் செய்தவர்கள் இந்த இல்லுமினாட்டிகளே.
இல்லுமினாட்டிகள் என்று அழைக்கப்படும் இந்த பெரும் பணக்காரர்கள், மறைவாக இருந்து கொண்டு அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துவது வியப்புக்குரியது. அமெரிக்காவுக்கு டாலர் நோட்டை அச்சிட்டு வழங்கும் ‘பெடரல் வங்கி’ இல்லுமினாட்டிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வங்கியில் பெருமளவு கடன் பெற்றுள்ள அமெரிக்க அரசு, இல்லுமினாட்டிகளின் சொற்படியே உலக நாடுகளை ஆட்டுவிப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது.
அமெரிக்க டாலர் நோட்டுகளில் காணப்படும் ‘முக்கோணத்திற்குள் கண்’ சின்னமே இல்லுமினாட்டிகளின் சின்னமாக உள்ளது. அதன் கீழே உள்ள பிரமிடின் பதிமூன்று படிகள், இல்லுமினாட்டி குழுவைத் தலைமையேற்று நடத்தும் 13 பணக்கார குடும்பங்களைக் சுட்டிக் காட்டுவதாகவும் நம்பப்படுகிறது.
1776 என்ற வருடக் குறிப்பும், ‘நோவுஸ் ஓர்தோ செக்லோரும்’ (மதச்சார்பற்ற புதிய இயக்கம்) என்ற லத்தீன் வாசகமும் இல்லுமினாட்டிகளின் ஆதிக்கத்தை உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இல்லுமினாட்டிகளின் திட்டத்துக்கு எதிராக செயல்பட்டதே அமெரிக்க அதிபர்கள் ஆபிரகாம் லிங்கன், கென்னடி ஆகியோர் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நமது நாட்டின் இரண்டாவது பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மரணம், முன்னாள் போப் 2-ம் ஜான் பால் மீதான துப்பாக்கிச்சூடு போன்றவற்றில் இல்லுமினாட்டிகள் கைவரிசை இருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.
செயற்கையான கருத்தியல்களை உருவாக்கி, உண்மையைப் பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கி வியாபாரம் செய்பவர்கள் இல்லுமினாட்டிகள். உலகத்தில் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் அவர்களே நிர்ணயம் செய்கிறார்கள். பெட்ரோலியப் பொருட்கள், மருத்துவம், ஆயுதங்கள், வங்கிகள், அரசியல், ஊடகங்கள், உணவுப் பொருட்கள், தகவல் தொடர்பு, அணுசக்தி என அனைத்தும் இல்லுமினாட்டிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பல்வேறு நாடுகளில் தீவிரவாதம், கலவரம், உள்நாட்டு புரட்சி போன்றவற்றைத் தூண்டி விடுவது இல்லுமினாட்டிகளே என்றும், தங்கள் ஆயுத வியாபாரத்தில் லாபம் பார்ப்பதற்காக இவ்வாறு செய்வதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலக அளவில் நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்திலும், கள்ளக் கடத்தலிலும், உடல் உறுப்புகள் விற்பனையிலும், மருத்துவச் சந்தையிலும் இல்லுமினாட்டிகள் பெருத்த லாபம் ஈட்டுகின்றனர்.
ஏழை மற்றும் வளரும் நாடுகளின் இயற்கை வளங்களைக் குறிவைத்து, தற்சார்பு பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத் துவதில் இல்லுமினாட்டிகள் கைதேர்ந்தவர்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தி, பணம் குவிப்பதை அவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இயற்கையாக எளிதில் கிடைக்கும் பொருட்களிடம் இருந்து மக்களைப் பிரித்து, பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தச் செய்வதே இல்லுமினாட்டிகளின் நோக்கம்.
கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளை நம்பியே அனைவரும் வாழ வேண்டும், மக்கள் சொந்தமாக தொழில் செய்தால் தங்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்காதே என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தி வருகிறார்கள் இல்லுமினாட்டிகள். மின்சார கார்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், அவற்றை பயன்பாட்டுக்கு வரவிடாமல் இல்லுமினாட்டிகள் தடுத்து வைத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. மின்சார கார்கள் வந்தால் பெட்ரோலிய சந்தையில் லாபம் பார்க்க முடியாது என்பதே அதற்கு காரணம்.
‘இல்லுமினாட்டி’ என்பது பொய்யான கருத்தியலாக இருக்குமோ என சந்தேகப்படும் அளவுக்கு அவர்கள் ரகசியமாகத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். தங்கள் திட்டங்கள் குறித்த தகவல்களை, தங்களுக்கு கீழுள்ள ஆறாயிரம் உறுப்பினர்களுக்கு ரகசிய குறியீடுகளின் வழியாகவே தெரியப்படுத்துவதாக கருதப்படுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள் பலரைத் தங்கள் கைப்பாவை யாக இல்லுமினாட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
உலக நாடுகளின் பெருமளவு தங்கமும், சொத்துக்களும் இந்த இல்லுமினாட்டிகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இதன் வழியாக, பல நாடுகளின் பொருளாதாரத்தை யும் வங்கிகளையும் அவர்கள் கைக்குள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. உலகத்தின் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் இல்லுமினாட்டிகளோடு தொடர்பு வைத்திருப்ப தாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களது தொழிலையும் லாபத்தையும் முடிவு செய்யும் இடத்தில் இல்லுமினாட்டிகளே உள்ளனர்.
இல்லுமினாட்டிகள் குழுவில் ஆதிக்கம் செலுத்துகிறவர்கள், அறிவுத்திறன் மிகுந்த சில யூத குடும்பங்களே என்பது பொதுவான கருத்து. அதேநேரம், இல்லுமினாட்டி குழுவைச் சேர்ந்தவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும், சாத்தானை வழிபடுகிறவர்கள் என்றும் கூறப்படுகிறது. மாதத்தின் 13-ந்தேதி வெள்ளிக்கிழமையில் வரும்போது, நட்சத்திர அடையாளத்துடன் அவர்கள் சாத்தானிய வழிபாட்டில் ஈடுபடுவதாக நம்பிக்கை நிலவுகிறது.
உலகம் முழுவதும் ஒழுக்கக் கேடுகளை பரவச் செய்து, பண்பாட்டு சீரழிவை உருவாக் குவதும் இல்லுமினாட்டிகளின் நோக்கமாக கூறப்படுகிறது. ஊடக நிகழ்ச்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக, பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிட்டு ஒவ்வொரு வரையும் சமூக கட்டமைப்பில் இருந்து விலகச் செய்வது இல்லுமினாட்டிகளே என்ற கருத்து உள்ளது. மனிதர்களை உளவியல் ரீதியாகத் தனிமைப்படுத்தி, சிந்திக்கும் திறனற்ற அடிமைகளாக மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இல்லுமினாட்டிகளின் எதிர்மறையான செயல்பாடுகள் காரணமாக, அவர்கள் நடுவில் இருந்தே ‘அந்திக்கிறிஸ்து’ தோன்றுவான் என்று சில கிறிஸ்தவ குழுக்கள் நம்புகின்றன. மனிதரை அடிமைப்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள், அடையாள எண் முறை போன்றவை பைபிள் கூறும் 666 என்ற முத்திரையோடு இணைந்ததாக அவர்கள் பார்க்கின்றனர். எது எப்படி இருந்தாலும், செயற்கை உணவுகளுக்கும் மருந்துகளுக்கும் அடிமையாகாமல், இயற்கையோடு இணைந்து சமூக உணர்வோடு வாழ்ந்தால் இல்லுமினாட்டிகளின் திட்டத்தை நம்மால் முறியடிக்க முடியும்.
- டே.ஆக்னல் ஜோஸ்.
Related Tags :
Next Story