காரியாபட்டி அருகே காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்


காரியாபட்டி அருகே காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2018 2:45 AM IST (Updated: 12 Aug 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தில் கடந்த 7 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதை தடுத்து பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கு வந்து விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story