மாவட்ட செய்திகள்

பேரளி, கல்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மதிப்பு கூட்டும் எந்திரங்களை கலெக்டர் ஆய்வு + "||" + Collector's review of valuables collected in Kalpadi, Kalpadi

பேரளி, கல்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மதிப்பு கூட்டும் எந்திரங்களை கலெக்டர் ஆய்வு

பேரளி, கல்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மதிப்பு கூட்டும் எந்திரங்களை கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் கல்பாடி மற்றும் பேரளியில் தலா ரூ.10 லட்சம் அரசு மானிய நிதி உதவியுடன் கூட்டும் எந்திரங்கள் மையங்களை கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் கல்பாடி மற்றும் பேரளியில் தலா ரூ.10 லட்சம் அரசு மானிய நிதி உதவியுடன் கூட்டும் எந்திரங்கள் மையங்களை கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-


நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் பேரளி-மருவத்தூர், கல்பாடி ஆகிய தொகுப்புகளில் ரூ.10 லட்சம் அரசு நிதி உதவியுடன் மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மையம் அமைக்கப்பட்டு வருகின்றன. நபார்டு வங்கியால் அமைக்கப்பட்ட பேரளி சிறுதானிய விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலமாக மருவத்தூர் தொகுப்பில், பேரளி கிராமத்தில் பழைய அரசு கட்டிடத்தில் மையம் செயல்பட உள்ளது. இந்த மையத்திற்கு கல் நீக்கும் எந்திரம், பருப்பு தோல் நீக்கும் எந்திரம், கடலை உடைக்கும் எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. எந்திரங்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மருவத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்கள் இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் கல்பாடி கிராமத்தில் வேளாண்மை துறையின் மூலமாக கூட்டு பண்ணையத்தால் அமைக்கப்பட்ட கல்பாடி தெற்கு விவசாய சங்கத்தால் மையம் இயக்கப்பட உள்ளது. மையத்தில் மாவு அரைக்கும் எந்திரம், கடலை உடைக்கும் எந்திரம், கல் நீக்கும் எந்திரம், செக்கு, நெல் உமி நீக்கும் எந்திரம் ஆகிய எந்திரங்கள் உள்ளன. கல்பாடி கிராமத்தை சுற்றியுள்ள குழுக்கள் இம் மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கனகசபை, துணை இயக்குனர் (உழவர் பயிற்சி மையம்) சந்தானகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணன், வேளாண்மை உதவி இயக்குனர் ராணி, உதவி பொறியாளர்கள் நாகராஜ், அறிவழகன், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.